மங்கோலியன் ஸ்பாட் எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் பாதிப்பு……
மேலைத்தேய நாட்டில் பிறக்கும் பிள்ளைகளில் பத்து சதவீதத்தினருக்கு பிறக்கும் போதே மங்கோலியன் ஸ்பாட் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் தோல் பாதிப்பு உண்டாகிறது. இத்தகைய பாதிப்பு பிள்ளைகள் வளர்ந்து ஐந்து வயதிற்குள் தானாக மறைந்து விடும். இருப்பினும் சிலருக்கு இத்தகைய பாதிப்பு மறைவதற்கு சிகிச்சை அவசியமாகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலைத்தேய நாடுகளில் மட்டுமல்லாமல் தற்போது ஆசிய நாடுகளிலும் இத்தகைய பாதிப்புடன் பிள்ளைகள் பிறக்கிறார்கள். பிறக்கும்போது இவர்களுக்கு கருப்பு வண்ண திட்டு போல் இடுப்பின் பின்பகுதியில் ஏற்படுகிறது. சில பிள்ளைகளுக்கு இதன் வண்ணங்கள் மாறி இருந்தாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதை காணலாம்.
தோலுக்கு நிறமளிக்கும் மெலனின் எனும் செல்கள் குழந்தை வயிற்றில் கருவாக உருவாகத் தொடங்கி பதினொரு வாரங்களுக்கு பிறகு உற்பத்தியாகும். இந்த செல்கள் தோலின் அடிப்பகுதியில் உற்பத்தியாகி மேல் பகுதிக்கு இயல்பாக இடம்பெயரும். இதில் ஏதேனும் தடையோ… தாமதமோ… ஏற்பட்டால், இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
மேலும் இத்தகைய பாதிப்பு ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களின் முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் தான் பெரும்பாலும் உண்டாகிறது. பொதுவாக பிள்ளைகள் வளர செல்களின் உற்பத்தியும், தோலின் நிறத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் ஊக்கம் அளிக்கும் கொலாஜெனின் உற்பத்தியும் அதிகரிப்பதால், இவை இரண்டு வயதிற்கு பிறகு தானாக மறைய தொடங்குகிறது.
மிக சிலருக்கே இத்தகைய பாதிப்பு ஐந்து வயதிற்குப் பிறகும் தொடரக்கூடும். இவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏதேனும் அசௌகரியத்தை வழங்கினால்.. அதற்கு வைத்திய நிபுணர்கள் இத்தகைய பாதிப்பினை துல்லியமாக அவதானித்து, அதற்குரிய பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் லேசர் சிகிச்சையை வழங்கி நிவாரணம் தருகிறார்கள்.
வைத்தியர் தீப்தி



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










