சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டல் நிகழ்வானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மாவட்ட செயலும் இணைந்து சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
“சாரதியின் இரு கரங்கள் மூலம் பிள்ளைகளை பாதுகாத்திடுவோம்” எனும் தொணிப்பொருளில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
நாடலாவிய ரீதியில் சிறார்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் முகமாகவும் துஸ்பிரயோகம் இடம் பெறாவண்ணம் முற்தடுப்பு மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில்மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் ஆர். பிரபாகர் மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஆர்.நிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇