தென்னை பயிர்ச்செய்கைச் சபை விடுத்துள்ள வேண்டுகோள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா சூறாவளியால் அழிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த தகவல்களை இம் மாதம் 25 ஆம் திகதிக்குள் வழங்குமாறு பொதுமக்களுக்கு தென்னை பயிர்ச்செய்கைச் சபை அழைப்பு விடுத்துள்ளது. 

தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர் கலாநிதி. சுனிமல் ஜயகொடி தெரிவிக்கையில்,

உள்ளூர் கிராம அலுவலர்கள் மூலம் இத் தகவலுக்கான பல கோரிக்கைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையைத் தீர்மானிக்க இத் தரவுகள் பயன்படுத்தப்படும். 

அழிக்கப்பட்ட ஒரு தென்னை மரத்திற்கு ரூ. 10,000 என்ற முன்மொழியப்பட்ட மானியம் இன்னும் பரிசீலனையில் உள்ளது என்று தெளிவுபடுத்தினார். 

சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களையும் பரிசீலித்த பின்னரே நஷ்ட ஈடு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects