பாடசாலை மாணவர்களுக்காக பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைத் தயாரிப்பதற்காக வெவ்வேறு இரசாயனங்களும் உலோகங்களும் பயன்படுத்தப்படுவதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் மஹிந்த விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
அவற்றைக் கொள்வனவு செய்யும் போது இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் 26.01.2025 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பிரியந்த பெர்னாண்டோ, தரமற்ற வர்ண பூச்சுகள் தொடர்பில் பெற்றோர்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் வர்ண பூச்சுகளைத் தயாரிப்பதற்கென தர அளவுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய தர பரிசோதனையின்றி இறக்குமதி செய்யப்பட்ட பல வகையான வர்ண பூச்சுகள் தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










