தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு (Quota) எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை அது மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, QR குறியீடு முறைமையை அறிமுகப்படுத்தியதன் ஊடாக நாட்டின் எரிபொருள் நுகர்வை 20% ஆல் குறைக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் தினசரி டீசல் நுகர்வு 4,800 மெட்ரிக் தொன்களாகவும், பெற்றோல் நுகர்வு 4,045 மெட்ரிக் தொன்களாகவும் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
எரிபொருள் வரிசைகளை இல்லாதொழிக்கும் நோக்கிலேயே அவசரமாக QR முறைமை கொண்டுவரப்பட்டதாகக் கூறிய அவர், உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு அடுத்த மாதம் வரை போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










