மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், 20,000 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் ஒன்று தென்னாப்பிரிக்கா வழியாக மாலைத்தீவை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மே மாதத்திற்கும் போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










