முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன்கட்டு குளத்தின் கீழ் 4,564.5 ஏக்கரில் சிறுபோக பயிர்ச்செய்கை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 3,686.5 ஏக்கரில் நெற் செய்கையும் 878 ஏக்கரில் ஏனைய உணவுப் பயிர்ச்செய்கையையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முத்தையன்கட்டுக் குளத்தின் 2025 ம் ஆண்டுக்காக இடம்பெற்ற சிறுபோக கூட்டத்தில் வைத்தே இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சிறு போக செய்கைக்கான வாய்க்கால் துப்பரவு நீர் வழங்கல் மற்றும் கால்நடை கட்டுப்பாடு, நன்னீர் மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










