இந்த முறை பெரும்போகத்தில் படைப்புழுவின் தாக்கத்தினால் சோளப் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை, மொனராகலை, அம்பாறை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த ஆண்டு சிறிய அளவிலான விவசாயப் பங்களிப்பு திட்டங்களின் கீழ் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், படைப்புழுக்களால் ஏற்படும் சேதங்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு உடனடியாக தெளிவுபடுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇