தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக சனத்தொகையில் வீழ்ச்சி காணும் சீனா!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சீனாவின் சனத்தொகை தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்தநாட்டின் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமை, நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

சீனாவில் சனத்தொகையை குறைப்பதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை திட்டத்தால் மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில் 2016 ஆம் ஆண்டில் அந்த கொள்கையை சீன அரசாங்கம் தளர்த்தியது.

அதன்பின்னர், ஓரளவு அனுகூலம் ஏற்பட்டிருந்த போதிலும் பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை.

எவ்வாறாயினும், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022 ஆம் ஆண்டில் சீன மக்கள் தொகை குறைந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டிலும் மக்கள் தொகை 2 மில்லியனால் குறைந்துள்ளது.

அதன்படி, சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்கள் உள்ளதாகவும் தேசிய புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects