AMCOR நிறுவத்தினால் மொனராகல மாவட்டத்தில் செயற்படுத்தப்படும் மனித வியாபாரத்திற்கு எதிரான செயற்பாடுகளை வலுப்படுத்தும் திட்டத்தின் ஊடாக சமூக மட்ட அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் அங்கத்தவர்களுக்கு மனித வியாபாரம் தொடர்பான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வொன்று 11.10.2023 அன்று மெதகம பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் மெதகம மற்றும் பிபிலை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சமூக மட்ட பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இப் பயிற்சியில் மனித வியாபாரம் என்றால் என்ன, மனித வியாபாரத்தின் வகைகள், மனித வியாபாரம் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம், உலகளாவிய மற்றும் உள்நாட்டில் மனித வியாபாரத்தின் சட்ட கட்டமைப்பு, மனித வியாபாரத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது, பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு நேர்காணல் செய்வது மற்றும் உதவி வழங்குவது, போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக சமூக மட்ட அங்கத்தவர்கள் தெளிவூட்டப்பட்டார்கள்.
மொனராகலை மாவட்டத்தில் அம்கோர் நிறுவத்தினால் இடம்பெறும் மனித வியாபாரத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு sure call நிறுவனமானது நிதியுதவி வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇