இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை உருவாக்கி செய்தி வாசிக்கச் செய்துள்ளது.
இது உள்ளூர் ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல சிங்கள மொழி செய்தி வாசிப்பாளர்கள் இருவரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச் செய்தி வாசிப்பாளர்களின் அறிமுகம் 05.05.2024 அன்று இடம்பெற்றது.
நாட்டில் சிங்கள மொழியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி செய்தி ஒளிபரப்பப்பட்டது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇