கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு 20.03.2024 அன்று வருகை தந்து ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தூதுவர்கள் ஆளுநரிடம் இணக்கம் வெளியிட்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇