நாளை (14.11.2024) இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் செயற்பாடு இன்று ( 13.11.2024) முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் காலை 9 மணி முதல் மாவட்ட செயலகங்களிலிருந்து குறித்த வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
விசேட காவல்துறை பாதுகாப்பின் கீழ் வாக்குப்பெட்டிகள் பிரதான வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇