அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான வேதனம் இன்று (08.04.2024) முதல் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் 07.04.2024 அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் சகல அரச ஊழியர்களுக்குமான ஏப்ரல் மாதத்திற்கான வேதனத்தை வழங்கி நிறைவுசெய்வதற்கு எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பாதீட்டில் அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வேதனமும் இதில் உள்ளடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇