இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பொருளாதார உச்சி மாநாடு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டின் கீழ் பொருளாதார உச்சி மாநாடு, எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைத்தல் , சிறந்த பொருளாதாரக் கொள்கைகளில் வேரூன்றிய மாற்றத்தின் வளர்ச்சி என்ற தொனிப்பொருளிலான இந்த உச்சி மாநாட்டை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வின் முக்கிய அம்சமாக , நிலையான பொருளாதார அபிவிருத்திக்கான தொலைநோக்குப் பார்வை குறித்து ஜனாதிபதி , இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவார் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார வழித்தடத்தின் வரைபடத்தை வடிவமைத்தல் குறித்தும் நிபுணத்துவமான முறையில் கலந்துரையாடல் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் டிஜிட்டல் முறைமையை முன்னேற்றுவதற்கு பிரயோகிக்கப்பட வேண்டிய யுக்திகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects