சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டப்பட்டு வரும் ஜெட்டா டவர் (Jeddah Tower), உலகின் உயரமான கட்டடமாக உருவெடுத்து வருகிறது. 1,008 மீற்றர் உயரத்தில் அமைக்கப்படும் இந்த மாபெரும் கட்டடம், 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடம் நிறைவடைந்ததும், தற்போது உலகின் உயரமான கட்டடமாகக் கருதப்படும் டுபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலீபா (828 மீற்றர்) சாதனையை முறியடித்து, ஆயிரம் மீற்றரைத் தாண்டிய உலகின் முதல் கட்டடமாக ஜெட்டா டவர் வரலாற்றுச் சாதனை படைக்கவுள்ளது.
2011 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2013 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இருப்பினும், பொருளாதார மற்றும் நிர்வாக சிக்கல்களால் கட்டுமானப் பணிகள் ஒரு கட்டத்தில் இடைநிறுத்தப்பட்டன. இதனால் திட்டமிடப்பட்ட உயரத்தின் சுமார் நான்கில் ஒரு பகுதி மட்டுமே இதுவரை கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புர்ஜ் கலீபாவை மிஞ்சும் உயரம்
டுபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலீபா 828 மீற்றர் (2,717 அடி) உயரத்துடன் தற்போது உலகின் உயரமான கட்டடமாக உள்ளது. ஜெட்டா டவர் 1,000 மீற்றரைத் தாண்டும் உயரத்தில் கட்டப்படுவதால், இந்த சாதனை முறியடிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
ஜெட்டா டவர் – முக்கிய விவரங்கள்
- மற்றொரு பெயர்: கிங்டம் டவர் (Kingdom Tower)
- இடம்: ஜெட்டா, சவுதி அரேபியா
- முன்மொழியப்பட்ட ஆண்டு: 2011
- கட்டுமானம் ஆரம்பம்: 2013
- எதிர்பார்க்கப்படும் நிறைவு: 2028
- உயரம்: 1,000+ மீற்றர் / 3,281 அடி
- மாடிகள்: சுமார் 167
- மேம்பாட்டாளர்: Jeddah Economic Company, Kingdom Real Estate Development
- வடிவமைப்பாளர்: Adrian Smith + Gordon Gill Architecture
- Architect of Record: Dar al-Handasah Shair & Partners
- Structural Engineer: Thornton Tomasetti
- MEP: Environmental Systems Design, Inc.
- மொத்த தரைப்பரப்பு: 243,866 சதுர மீற்றர்
உலக கட்டிடக்கலை வரலாற்றில் புதிய அத்தியாயம்
ஜெட்டா டவர் நிறைவடைந்ததும், உலக கட்டிடக்கலை மற்றும் பொறியியல் துறைகளில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது சவுதி அரேபியாவின் நகர அபிவிருத்தி மற்றும் உலகளாவிய அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










