இலங்கையின் மிகவும் பழமையான பாடசாலையான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கல்லூரி அதிபர் இரா.பாஸ்கரன் தலைமையில் 27.11.2023 அன்று கல்லூரி கார்ட்மன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக வணக்கத்திற்குரிய போதகர் சாம் சுரேந்திரன், வணக்கத்திற்குரிய சிவ ஸ்ரீ ஜெகதீச குருக்கள் ஆகியோரும்,
பிரதம அதிதியாக மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனும், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) சி.சுபாகரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் R.J. பிரபாகரன்,
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவன பிரதி பொது முகாமையாளர் எந்திரி . Y. கோபிநாத் , மின்சாரசபை பொறியியலாளர் உமாமகேஸ்வரன் மயூரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் V விஜிதரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி T.சிவஜோதிராஜா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி துஷ்யன்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், மற்றும் வலயக்கல்வி அலுவலகர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள், கல்லூரியின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகள், ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொது தர சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சிறந்த புள்ளிகளைபெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரி சாரணிய மாணவர்களுக்கும் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மாணவர்களின் படைப்பாற்றல், கலை இலக்கிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் நோக்குடன், ‘மத்திய தீபம்’ எனும் சஞ்சிகையும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.