முகத்துவார மீனவ சங்கத்தினருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு பாலமீன் மடு, திராய்மடு மீனவ சங்கத்தின் தலைவர் வி.மனோகரன் தலைமையில் 11.02.2024 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கே.யூ.பி விமலரத்ன, பொலிஸ் பரிசோதகர் பி. சசிந்திரா மீனவ சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரனினால் மீனவ சங்க உறுப்பினர்களின் குடும்பத்தவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பாலமீன்மடு, திராய்மடு மீனவ சங்க உறுப்பினர்களுக்கு கூட்டுறவு சங்கத்தின் நீதி அனுசரணையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 7 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப் போதிகள் 250 சங்க உறுப்பினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பல வருடங்களாக முகத்துவாரத்தீனுடாக செல்லும் மீனவர்களின் இறப்பை தவிர்ப்பதற்கு முகத்து வாரத்தினை ஆழப்படுத்தி தருமாறு மீனவர்கள் அரசாங்க அதிபருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇