குரங்குகளால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் கேகாலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாய அமைப்புகளுக்கு தமது பரவலாக்கப்பட்ட நிதியில் இருந்து வாயு துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
குரங்குகளால் ஏற்படும் சேதத்தினால் விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇