நேற்று (05) நள்ளிரவு முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த ரயில் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே இன்ஜின் பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது சம்பளத்தை குறைப்பதற்கு முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நீக்குமாறு கோரியே அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.
இதன்படி புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், மேற்பார்வை முகாமையாளர்கள் உள்ளிட்ட புகையிரத தொழிற்சங்கங்களும் இப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் நேற்று பிற்பகல் இது தொடர்பில் ரயில்வே அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரயில்வே அதிகாரிகளின் விளக்கத்திற்குப் பிறகு, பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்ததாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇