சமூக விஞ்ஞானப் போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் வெற்றியீட்டி தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொண்டு நான்காம் மற்றும் ஏழாம் இடங்களைப் பெற்று வெற்றியீட்டிய மீராபாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் கெளரவிக்கப்பட்டனர்.
தரம் 11 இல் கல்வி பயிலும் சைபுதீன் லீனத் அசா தேசிய மட்டத்தில் நான்காம் இடத்தையும் தரம் 7 இல் கல்வி பயிலும் கலீம் சகீனத் தேசிய மட்டத்தில் 7 ஆம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
இவ் மாணவர்களுக்கு பாடசாலையின் அதிபர் யு.எல்.மன்சூர், பிரதி அதிபர் திருமதி பிரதீபன் ஆகியோரினால் கெளரவம் வழங்கப்பட்டது.
இப் போட்டியில் தேசிய மட்டத்தில் ஒன்று தொடக்கம் பத்து வரையான வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇