கண்டிய ஆடையை உலக பாரம்பரியமாக மாற்றுவது குறித்து புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டின் கலாசார பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை எட்டு இடங்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களாக பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த உலக பாரம்பரிய தளங்களில் சிகிரியா, பொலன்னறுவை, ரங்கிரி தம்புலு கோவில், காலி கோட்டை, சிங்கராஜா வனப்பகுதி, அனுராதபுர பூஜா நகரம், கண்டி தலதா மாளிகை மற்றும் ஹோர்டன் சமவெளி மற்றும் நக்கிள்ஸ் மலைத்தொடரை உள்ளடக்கிய நாட்டின் மத்திய மலைப்பகுதிகள் ஆகியவை அடங்கும்.
நாட்டின் கலாசார பாரம்பரியத்தை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல கலாசார சங்கமொன்றின் தேவை எழுந்துள்ளதாகவும், அதற்காக நாட்டின் அனைத்து கலைஞர்களும் ஒன்று திரள்வது அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇