இந்த வருடமும் தென் மாகாணத்தில் தேயிலைக்கான அதிகூடிய விலை பதிவாகியுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு, தொழிற்சாலைகள் 285 ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை மாவட்டத்தில் அதிகளவிலான சிறு தோட்ட உரிமையாளர்கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற நிலையில், இவ்வாறு அதிகூடிய விலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாட்டின் 11 மாவட்டங்களில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தோட்ட தேயிலை உரிமையாளர்கள் தேயிலை செய்கையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇