அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் (22.03.2024) முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை இணையவழி முறைமைக்கு இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜெயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக மற்றுமொரு குழுவினர் தமது விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறும் மக்கள் தற்போது 16 இலட்சத்துக்கும் அதிகமாக உள்ளதுடன் அடையாள அட்டை இல்லாமை உள்ளிட்ட ஆவணங்களில் உள்ள பிரச்சனைகளால் இதுவரை 300,000 பேருக்கு மேல் நிவாரணம் வழங்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇