இன்று அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் வாழும் வறிய மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்ற அரசசார் பற்ற நிறுவன பிரதிநிதிகளுடனான சேவை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் 2021, 2022, 2023ஆம் ஆண்டுக்கான அரசசார்பற்ற நிறுவனங்களின் பணிகள் தொடர்பான தெளிவூட்டல்கள் இடம்பெற்றன.
கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம், கிராம சேவை நிர்வாக அதிகாரி கந்தசாமி, விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் தினேஷ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு பிரதேச செயலாளர்கொரோனா தாக்கம் காரணமாகவும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் திருக்கோவில் பிரதேச மக்களின் உணவு மருத்துவம் மற்றும் உயிர்பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றிய நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
திர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளளாக திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பங்களுக்கு தேவையான வீடுகள் கல்வி சுகாதாரம் போன்ற ஆலோசனைகள் திட்டங்கள் இன்று முன்மொழியப்பட்டன.