மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக நீர் மின் நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கமான மவுசாகல மற்றும் காசல்ரீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியது. குறிப்பாக மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இன்னும் ஒரு சில அடிகள் நிறைய உள்ளது.
காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியது. கென்யோன், லக்சபான, நவலக்சபான, விமலசுரேந்திர, கலுகல, பொல்பிட்டிய ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மத்திய மலைநாட்டில் மழை பெய்யும் பட்சத்தில் சகல நீர் தேக்கங்களும் நீர் நிரம்பிய நிலையில் வான் கதவுகள் எந்த நேரத்திலும் திறந்து விட வாய்ப்பு உள்ளது.
ஆகையால் தாழ் நிலப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன், கரையோர பகுதியில் உள்ள மக்கள் சற்று பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கூறினார்.