கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 மார்ச் மாதத்தில் 0.9% ஆக இருந்து 2024 ஏப்ரலில் 1.5% ஆக உயர்ந்துள்ளது.
இதில், உணவுப் பணவீக்கம் 2024 மார்ச் மாதத்தில் 3.8% ஆக இருந்து ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆகக் குறைந்துள்ளது
அதேபோல், உணவு அல்லாத பணவீக்கம் 2024 ஏப்ரலில் 0.9% ஆக அதிகரித்துள்ள நிலையில், இது 2024 மார்ச் மாதத்தில் -0.5% ஆக பதிவாகியிருந்தது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇