சீரற்ற வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் இரத்தினபுரி, கேகாலை, அனுராதபுரம், கண்டி, காலி, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய 7 மாவட்டங்களில் 19,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 4,786 ஆகும்.
மேலும், 32 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 37 குடும்பங்களைச் சேர்ந்த 1,140 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி அடுத்த 24 மணித்தியாலங்களில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் கடும் மழை காரணமாக பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇