ஐரோப்பா முழுவதும் பயணம் செய்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பிரித்தானியா முழுவதும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், ஐரோப்பா முழுவதும் பயணம் செய்ததுடன் கடந்த மே மாதம் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிக்கு இடையில் Seattle-Tacoma சர்வதேச விமான நிலையத்தைக் கடந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த சுற்றுலாப் பயணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என்பதைக் கண்டறிய அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதிக காய்ச்சல், இருமல், தும்மல், கண்களில் நீர் வடிதல் மற்றும் ஆரம்ப அறிகுறிகளுக்குப் பிறகு பொதுவாக தோன்றும் சரும அழற்சி ஆகியவையே நோயின் அறிகுறிகளாகும்.
இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் எவரும் உடனடியாக வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇