கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாணந்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்று பாணந்துறை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று (13.06.2024) காலை தடம்புரண்டுள்ளது. இதன்போது , ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டு அருகிலிருந்த சமிக்ஞை கட்டமைப்பில் மோதியதால் அக் கட்மைப்பும் முற்றிலும் செயலிழந்துள்ளது.
இதனால், கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கரையோர ரயில் சேவை மொரட்டுவை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇