அவுஸ்திரேலியா மகளிர் இல்லத்தின் நிதி உதவியுடன், சமூகநலன்புரி அமைப்பின் தலைமையில், Rotary Club of Batticaloa Heritage மற்றும் Rotary Colombo Port City இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் இலவச கண்புரை சத்திரசிகிச்சைகளை நடாத்தியதுடன் செயற்கை கண்ணக வில்லைகளும் பொருத்தப்பட்டன.
சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் திருமதி தயனி கிருஷ்ணாஹரன் தலைமையில் 21-06-2024 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் Rotary club of Batticaloa Heritage இன் தலைவர் கி.கௌரீஸ்வரன், Rotary Colombo Port City இன் தலைவர் Michael Jayawardena, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் யசோதா ரமேஷ் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் 50 பேர் பயனடைந்ததுடன் இது 200 பேரை இலக்காகக் கொண்ட ஓர் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் முதற்கட்டமாக 03-05-2025 அன்று நடாத்தப்பட்ட இலவச சத்திரசிகிச்சையில் சுமார் 50 பேருக்கு கண்ணக வில்லைகள் வழங்கப்பட்டிருந்ததுடன் இவ்வேலைத்திட்டத்தில் இதுவரை 100 பேர் பயனடைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான நிதி திரட்டப்படுவதாகவும் இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியர் யசோதா ரமேஷ் “இவ்வாறான சத்திர சிகிச்சைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலமைகூட காணப்பட்டிருந்த போதிலும் தம்மால் தொடர்ச்சியாக இவ்வாறு சத்திர சிகிச்சைகளை நடாத்துவதற்கு காரணம் இவ்வாறான உதவிகளே என்றும் அதற்காக தாம் அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும்” தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇