வெளிநாட்டு மாணவர்களிற்கான விசா கட்டணத்தை அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்பவர்கள் அதிகரித்துள்ளதால் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக அவுஸ்திரேலியா வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணங்களை அதிகரித்துள்ளது.
இன்று முதல் வெளிநாட்டு மாணவர்களிற்கான விசா கட்டணங்கள் 710 அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை சுற்றுலா விசாவை வைத்திருப்பவர்களும் தற்காலிக பட்டதாரி விசாக்களை வைத்திருப்பவர்களும் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதை அவுஸ்திரேலியா தடை செய்துள்ளது.
இன்று நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் எங்களின் சர்வதேச கல்விமுறையின் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்க உதவும் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளார் ஓ நெய்ல் நியாயமான சிறிய சிறந்த குடியேற்ற முறையை உருவாக்க உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் வெளியான புள்ளிவிபரங்கள் அவுஸ்திரேலியாவிற்கான குடிவரவு 60 வீதத்தினால் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது .
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇