கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய பசளைக்கான பணம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் இதனைத் தெரிவித்தார்.
இதுவரை 9,091 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பசளை மானியத்துக்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏனையவர்களுக்குக் கட்டம் கட்டமாக வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇