இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக 2024 வாக்காளர் பட்டியலின்படி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17,143,354 ஆகும்.
அதில், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக கம்பஹா பதிவாகியுள்ளது.
அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 1,881,129 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
17 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட கொழும்பு மாவட்டம் இரண்டாவது இடத்தையும், 14 இலட்சத்துடன் குருநாகல் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 86,889 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇