2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு சுற்று நிருபத்திற்கமைய, மாணவர்களை உள்வாங்குதல் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதம் வழங்குவதையோ அல்லது அதிகாரிகளை இடமாற்றம் செய்வதையோ கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
கல்வித் துறையில் தொழிற்சங்கப் பிரதிநிதி எனக் கூறிக்கொள்ளும் நபர் ஒருவர், மேற்படி தகவல் தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் செய்வதாக அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇