காட்டு யானைகளை பாதுகாக்கும் நோக்கில் இன்று (12.08.2024) உலக யானைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
கடந்த 2011 ஆம் ஆண்டு யானைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 6000 என பதிவாகியுள்ளது. இதில் 55.09 சதவீதம் வயது கூடிய யானைகள் என பதிவாகியுள்ளது.
மேலும் 25. 3 சதவீத யானைகள் இள வயது யானைகள் எனவும் 12. 4 சதவீத யானைகள் குட்டி யானைகள் எனவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், யானைகள் தினத்தை முன்னிட்டு சீகிரியாவில் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.