மட்டக்களப்பு பிள்ளையாரடி மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் டி.சதானந்தத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நிறைவு நல மைய பொறுப்பு வைத்திய அதிகாரியும் பேராசிரியருமான வைத்தியர் அருளானந்தம் தலைமையில் பல்துறை சார் மருத்துவ சேவைக்கான நிறைவு நல மையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உத்தியோபூர்வமாக 05.09.2024 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .
மட்டக்களப்பு பிள்ளையாரடி மருத்துவ பீடத்தில் பணியாற்றும் வைத்தியர்களினால் மட்டக்களப்பு பிரதேசத்தில் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான இலவச வைத்திய சேவைகளை வழங்க ஆரம்பிக்கப்பட்ட இலவச மையமானது பொதுமக்களின் மருத்துவ சேவைக்கான நிலையமாக உத்தியோகபூர்வமாக பிள்ளையாரடி மருத்துவ பீடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பீட வாரத்தை முன்னிட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் மையம் ஊடாக பிள்ளையாரடி பிரதேசத்தை அண்டிய ஏழு கிராம சேவை பிரிவுகளில் வாழ்கின்ற தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்காக இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் நிறைவு நல மைய இணைப்பாளர் வைத்தியர் திலினி, வைத்திய நிபுணர் பேராசிரியர் வைத்தியர் கருணாகரன், வைத்திய நிபுணர் பேராசிரியர் வைத்தியர் உமாகாந்தன், வைத்தியர் எஞ்சளா அருள்பிரகாசம், நிறைவு நல மையம் பொறுப்பு தாதியர், உத்தியோகத்தர் தட்சணாமூர்த்தி உட்பட மருத்துவ பீட வைத்தியர்கள், மருத்துவ பீட பயிற்சி மாணவர்கள், பயிற்சி தாதிய மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇