மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடையும் அபாயம் – சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவல் மீண்டும் தீவிரமடையும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 40,657 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1,247 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை சுத்தப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects