நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 3 மாவட்டங்களில் 369 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களினால் 2 பேர் காயமடைந்த நிலையில் , 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வட மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடுமென அத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்குப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇