இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 09 ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது.
அந்த நிலையில் இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச்சீட்டு தொடர்பிலான விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி www.srilankacricket.lk என்ற இணையத்தளத்தினூடாக நுழைவுச்சீட்டுகளை நிகழ்நிலை முறை ஊடாக கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்பதுடன், RDICS இன் (Rangiri Dambulla International Cricket Stadium) நுழைவுச்சீட்டு கருமபீடத்திலும் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இருபதுக்கு 20 போட்டி நாட்களில் RDICS இன் (Rangiri Dambulla International Cricket Stadium) பிரதான நுழைவாயில் அருகே சிறப்பு நுழைவுச்சீட்டு கருமபீடம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்லேகலையில் உள்ள PICS இன் நுழைவுச்சீட்டு கருமபீடம் எதிர்வரும் நவம்பர் 15 முதல் திறக்கப்படும்.
குறித்த கருமபீடங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 வரை திறந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் போட்டி நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 8 வரை திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇