சங்கானை பிரதேச மருத்துவமனையின் தேவைப்பாடுகள் தொடர்பில் சங்கானை பிரதேச மருத்துவமனை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்துக் கலந்துரையாடினர்.
ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் , சங்கானை பிரதேச மருத்துவமனை நோயாளர்களின் நலன்கருதி கடந்த காலங்களில் இடம்பெற்ற அரச மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளை மீள இயக்குமாறு அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சங்கானை பிரதேச மருத்துவமனையை தரம் உயர்த்துமாறு அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகளால் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதுடன், மருத்துவமனையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு நிலையத்துக்கு தனியான கட்டடம் அமைப்பதற்கான நிதி உதவிக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இவை தொடர்பில் சாதகமான நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇