ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்ட முல்லைத்தீவு கரைதுறைபற்று பொதுவிளையாட்டு மைதானம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் 31.12.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் , முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைதுறைபற்று பிரதேச செயலர், கரைதுறைபற்று பிரதேச சபைச் செயலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு மைதானத்தின் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு , நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து , கண்காட்சி உதைபந்தாட்டப் போட்டியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇