பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேங்காய்ப் பால், தேற்காய் பால்மா மற்றும் உறைந்த தேங்காய் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும்  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பான அமைச்சரவை அனுமதிப்பத்திரத்தை விரைவில் முன்வைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோரால் நியமிக்கப்படுகின்ற குழுவின் ஊடாக, ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் அவசியமான தேங்காய்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் விரைவில் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects