உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (26) நடைபெறவுள்ளது.
இந்த போட்டி பெங்களூருவில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில்
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 07வது இடத்திலும் இங்கிலாந்து அணி எட்டாவது இடத்திலும் உள்ளன.
இதன்படி இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் போட்டித் தொடரில் முன்னேறுவதற்கு முக்கியமானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇