புகையிரத சேவைகளின் நேரங்களில் மாற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இரவு நேரங்களில் ஓடும் புகையிரங்களில் காட்டு யானைகள் மோதுவதைத் தடுப்பதற்காக மேலதிக வேக வரம்புகளை அமுல்படுத்தவும் , புகையிரத சேவை நேர அட்டவணைகளை மாற்றியமைக்கவும் புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அந்த வகையில் மட்டக்களப்பு மார்க்கத்தில் பலுகஸ்வெவயிலிருந்து ஹிங்குராக்கொட வரையும், வெலிகந்தையிலிருந்து புனானை வரையும், திருகோணமலை மார்க்கத்தில் கல்லோயாவிலிருந்து கந்தளாய் பகுதியையும் உள்ளடக்கியவாறு இந்த புகையிரத சேவைகளின் நேர அட்டவணையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் மீனகயா புகையிரதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07.03.2025) முதல் புதிய நேரத்தில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

வழக்கமாக இரவு 7 மணிக்குப் புறப்படும் புகையிரதம் வெள்ளிக்கிழமை (07.03.2025) முதல் இரவு 11 மணிக்குத் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அடிக்கடி குறித்த புகையிரதத்தில் யானைகள் மோதுண்டு உயிரிழப்பது வழக்கமாக உள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு இத் தீர்மானத்தைத் புகையிரதத் திணைக்களம் எடுத்துள்ளது.

நேர அட்டவணையை பார்வையிட

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects