கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவினில் வேர்ல்ட் விஷன் அமைப்பினரினால் உள்ளூர் முயற்சியாளர்களை வலுவூட்டும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் பங்கு பற்றுதலுடன் கல்குடாவில் 28.02.2025 அன்று இடம் பெற்றது.
மாவட்டத்தில் வேர்ல்ட் விஷன் அமைப்பினர் உள்ளூர் முயற்சியாளர்களை வலுவூட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி செயற்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒர் அங்கமாக பாசிக்குடா கடற்கரைக்கு அண்மித்த பிரதேசத்தில் பனைசார் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான தற்காலிக கூடாரம் அரசாங்க அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் பிரதேச மக்களின் குடிசை கைத்தொழிலில் ஒன்றான பனைசார் உற்பத்திப் பொருட்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கு தற்காலிக கூடாரம் ஒன்றை அமைத்து வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினர் இதனை
வழங்கியுள்ளனர்.
35 க்கு மேற்பட்ட உள்ளூர் பெண் முயற்சியாளர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றது.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம், வேர்ல்ட் விஷன் உத்தியோகத்தர்கள் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










