மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரனின் ஏற்பாட்டில் 25.03.2025 அன்று நடைபெற்றது.
இதன் போது, மாவட்டத்திற்கான கணக்காய்வு, ஐய வினாக்கள், ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. மேலும், இக்காலாண்டிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
2024 ஆம் ஆண்டில், மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றியும் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில், தேசிய கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களப் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உள்ளக கணக்காய்வாளர் நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் சுதர்ஷினி ஶ்ரீகாந், நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), சிரேஸ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் எம். அரபாத், மாவட்ட பிரதம கணக்காளர் காயத்திரி ரமேஸ், பிரதேச செயலாளர்கள், கணக்காய்வு அத்தியட்சகர் ரொபட், கணக்காளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகதார்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










