இன்றைய காற்றின் தரம் குறித்து வெளியான அறிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப்பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் அடிப்படையில்,

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமான நிலையிலும், கொழும்பு 07, குருணாகல், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையிலும் காணப்பட்டது.

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரக் குறியீடு 34 மற்றும் 60 க்கு இடையில் இருக்கும். இது பெரும்பாலான நகரங்களில் ஆரோக்கியமான நிலையைக் குறிக்கும். அதேவேளை, கொழும்பு 07, யாழ்ப்பாணம், குருணாகல், வவுனியா, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் மிதமான நிலையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.

அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects