நாட்டில் 24 பகுதிகளில் டெங்கு அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் 68 ஆயிரத்து 118 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார் .
இந்த மாதத்தில் மாத்திரம் இதுவரை 3631 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கடந்த மாதம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் ஆயிரத்திற்கும் அதிகமான பதிவை காட்டுவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇