2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான முதல் சுற்று மேன்முறையீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பெறுபேறுகளை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீடு மூலம் பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான விடயங்கள், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரால் மேற்கொள்ளப்படும் எனக் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










